காசா – இஸ்ரேல் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், நேற்றைய (21) நிலவரப்படி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37,431 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 45 போ் உயிரிழந்ததாகவும், 130 போ் காயமடைந்ததாகவும் காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் நடத்திவரும் குண்டுவீச்சில் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 85,653 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த ஒக்டோம்பர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் அதிகாரபூா்வ எண்ணிக்கை 1,139 என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.