காட்டு யானை தாக்கி மூன்று விவசாயிகள் பலி.

வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கி மூன்று விவசாயிகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, பொலனறுவை – திம்புலாகல, மெதிரிகிரிய – நவநகர மற்றும் சாலியவெவ – நிலபம்மா ஆகிய மூன்று பிரதேசங்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, பொலனறுவை – திம்புலாகல பிரதேசத்தில் 47 வயதான டி.எம்.செனவிரத்ன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

மெதிரிகிரிய – நவநகர பிரதேசத்தில் டி.பி.டி.ஜி. சரத்சந்ர என்ற 65 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.

சாலியவெவ – நிலபம்மா பிரதேசத்தில் ஆர்.பீ.டீ.பிரேமதாச என்ற 76 வயதான வயோதிபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.