காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பு – ஐக்கிய நாடுகள் காரியாலயத்தின் முன் போராட்டம்.

கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தின் முன்பு சற்று முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஒன்றிணைந்து  இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச விசாரணை யை கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான தாய்மார்கள் கலந்து கொண்டு கதறி அழுத வண்ணம் பல்வேறு கோஷங்களை எழுப்பி தமது கோரிக்கையை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.