காதலனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நடிகை சடலமாக மீட்பு.

திருமணம் செய்து கொள்ளாமல் காதலனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பிரபல ஒடிசா தொலைக்காட்சி நடிகையான ரேஷ்மிரேகா , திருமணம் செய்து கொள்ளாமல், காதலன் சந்தோஷ் பட்ராவுடன் கடந்த ஒன்றரை மாதமாக ஒரே வாடகை வீட்டில் குடித்தனம்  நடத்திவந்த நிலையில் , அந்த வீட்டில் மர்மமான முறையில் சடலமாக தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

காதலன் சண்டையிட்டு பிரிந்து சென்றதால் ரேஷ்மி தற்கொலை செய்து  கொண்டிருக்கலாம் என்று போலீசார் கூறும் நிலையில் தனது மகளை, அவளது காதலன் கொலை செய்துவிட்டதாக ரேஷ்மியின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.