மராட்டிய மாநிலம் நவிமும்பை பன்வெல் தேவிச்சாபாடா பகுதியில் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இளம்பெண்ணின் வீட்டில் யாரும் இல்லை. எனவே அவர் அதே பகுதியில் வசிக்கும் 18 வயது காதலனை வீட்டுக்கு அழைத்து உள்ளார்.
2 பேரும் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென இளம்பெண்ணின் அண்ணன் வந்தார்.
வெகுநேரமாக தட்டியும் இளம் பெண் கதவை திறக்கவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு தான் இளம் பெண் கதவை திறந்து உள்ளார்.
அப்போது வீட்டின் உள்ளே இளம்பெண்ணுடன் அவரது காதலன் இருப்பதை பார்த்து அண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி உடனடியாக அவர் தந்தைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து தந்தையும் அங்கு வந்தார்.
2 பேரும் இளம்பெண்ணின் காதலனை பிடித்து அரிவாள், மண்வெட்டியால் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர்.
அவர்கள் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய இளம்பெண்ணின் தந்தையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.