காதல் விவகாரம். ; முன்னாள் காதலன் கத்திக்குத்துக்கு இலக்க்கி பலி.

நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும், கொலையைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக பெண் ஒருவரும் ஆணும் நவகமுவ பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் முன்னாள் காதலரும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு அந்த பெண்ணின் தற்போதைய காதலன், முன்னாள் காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.