கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் பலி.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் மாரடைப்பு மற்றும் மூளை செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.  

இதில் கான்பூரில் 25 பேர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலால் மாரடைப்பு ஏற்பட்டும், மூளை செயலிழந்தும் பலியாகினர்.

இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் ஆவர்.

இதனால் கடும் குளிர்காலங்களில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்கும்படி நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.