கார்த்திகை நாள்
தமிழரை என்றுமே தமிழறேன்றாக்க அ கண் திறந்த மாதம்…
சாவிலும் மானம் பெரிதென்று சாற்றிய நாள்- கார்த்திகை 27
ஆளும் கதிரைகளை ஆட்டிப்படைத்த ஆன்மாக்கள் அமைதியாக உறங்கும் நாள்..
ஆண்டுகள் கடந்திடும் இது தற்செயலான சம்பவம் அல்ல ஒரு சரித்திரமான அதிசயம்… கார்த்திகை 27
கூண்டிருக்க இனி விரும்போம் என நீண்ட காலத்தின் பின் நிறுவிய நாள்… சிறகெடுத்து பறந்த சிட்டுக்குருவிகளின் தீபத்திருநாள்…
கார்த்திகை மாதம் கல்லறை மேனியர் கண் திறந்திடுவர்….
மெல்லச் சிரிக்குமொலி உள்ளே கேட்கும்…
புதைக்கவில்லை விதைத்தோம் என்ற பொருளுணர்ந்து உருகுமெம் விழிகள்…
உள்ளே கொதிப்புறும் குருதி…
சுடரும் வளக்கொளியில் மேனி சூடேறும்…
மாவீரர்களே…
மகத்தானவர்களே…
விடுதலைக்காய் நீர் அளித்த உயிருக்கு விலை அதிகம்….
கண்ணீர் சொரிதலும் கவிதை வரைதலும் கால் தூசு…
மண்ணுக்காய் மரணிப்பதே மா தவம்…
விழிமூடி துயில்கின்ற வேங்கைகளே…
துயிலுங்கள்…
கந்தகம் கருவிடம் கயிற்றில் கட்டிய காவலை நாம் இழந்தோம்…
கடல் யாவிலும் காரில் சூழ்ந்துள்ள கனவையும் கலைத்து விட்டோம்…
இடித்து புழுதியாக்கப்பட்ட உங்கள் கல்லறைகள் மீது ஆணை!
தமிழ் கருவறைகள் மீண்டும் உங்களை சுமக்கும்…
ஈழத் தமிழ் மண் பார்த்து உலகமே வியக்கும் …
வானுயிரப் பறக்கும் எம் கொடிகள்…
பகையுழுது போகலாம் உங்கள் படுக்கைகளை தகையழித்து போகுமோ சந்தனக் காடுகள்.,..
ஊரெரிந்து உயிர் பிரிந்து போயினும் இமைக்கும் நொடியிலும் வீரம் பேசும் எம் வாய் …
இது வெறும் நிலம் அன்று…
வெந்து தணியாது வீரநிலம்…
-அனுஷியா அசோகன்