கார், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி.

மகாராஷ்டிராவில், கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாக்பூரின் சக்கர்தாரா மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், 4 பேர் சுமார் 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.