மோசமான வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஒருவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகும் என்றும் 1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.