காலிமுகத்திடலில் காத்தாடி விழா.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காத்தாடி விழாவிற்கு இலங்கை பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.

காலிமுகத்திடலில் நேற்றைய தினம் மக்கள் பலவிதமான காத்தாடிகளை பறக்க விட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களும் ஜனாதிபதி ரணில் மற்றும் சில அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டிருந்தன.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த பட்டங்களை கீழே இறக்கியதுடன் பட்டங்களை ஏற்றியவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.