காலியில் துப்பாக்கிச் சூடு.

காலி, தடெல்ல – பியதிகம சுதர்சனராம வீதியில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (16) காலை உந்துருளியில் வந்த மூவரில் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும், துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காரணமான குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

உந்துருளியில் வந்தவர்களும் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.