காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயது மதிக்கத்தக்க, ஆண் ஒருவர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலி முகத்திடல் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கி இருந்தது.
அந்நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரென பின்னர் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.