கிரேன் இயந்திரம் ஒன்று விழுந்து விபத்து : 16 பேர் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளின் போது கிரேன் இயந்திரம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர்.

குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.