கிளாலியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில்  மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது   சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.