கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் வீட்டின் பின்பக்கம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக அடையாளம் காணப்பட்டவர் 65 வயதுடைய 05 பிள்ளைகளின் தந்தையான தம்பையா கந்தசாமி என்பவர் ஆவார்.
பளை இத்தாவில் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று தனது தந்தையான தம்பையா கந்தசாமி என்வரை வீட்டில் விட்டு விட்டு உறவினர் வீட்டிற்கு வவுனியா சென்று நேற்று திரும்புவதாக கூறியிருந்த நிலையிலேயே குறித்த சடலத்தை அவதானித்துள்ளனர்.
பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதோடு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.