கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் மின்சார சபைக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன் கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்தவரே உயிரிழந்துள்ளார்.
வட்டக்கச்சி மாயனூர் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தரான 33 வயதுடைய ஜெயசீலன் என்ற 03 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மீண்டும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விருந்தொன்றில் ஏற்பட்ட தகராறை அடுத்து, அதை சமரசம் செய்யும் பேச்சுக்கு என அழைத்தே அவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
வாள்வெட்டு சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ள நிலையில், ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.