ஹெரோயின் மற்றும் ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனுர் பகுதியில் தருமபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக உழவனூர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஊசி மருந்துகள் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறு போதியில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோயின், ஊசி மருந்துகள், மருந்து வில்லைகள் 720 மற்றும் 20 லீற்றர் கசிப்பு என்பனவற்றை மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேக நபர் ஒருவரும் தர்மபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.