கிளிநொச்சியில் 8 மாத குழந்தை உயிரிழப்பு

சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு சளி காரணமாக சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளர் காவு வண்டி மூலம் குழந்தை கிளிநொச்சியில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான பிரேத பரிசோதனையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொள்ளவுள்ளார்.