கிளிநொச்சியில் QR முறை. :  மனஉளைச்சலில் பணியாளர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் QR முறையில் எரிபொருள் விநியோகம் செய்வதில் அதிகாரிகள் மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் செயல்படும் துர்ப்பாக்கிய நிலையில் கிளிநொச்சி காணப்படுகின்றமை அவதானிக்க முடிகிறது.

QR முறையில் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு வாங்கினால் மட்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரும் ஒரு சில மக்கள் அதிகாரிகளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களையும்  மிகவும் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை பாவிப்பதால் மனவுளைச்சலுக்கு செல்வதாக தெரிவிக்கிறார்கள்.