கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் சடலம் ஒன்று அடையாளம்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றில் இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீதவான் பார்வையிட்ட பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்று மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.