வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டமானது வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) இடம்பெற்றிருந்தது.
“கொலையாளி ஜனாதிபதியாய் உள்ள நாட்டில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும், குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 ற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே?, யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களை பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களை காணாமல் ஆக்கப்பட்டோர் என அவர்களின் குடும்பத்தையும் ஏமாற்றுகின்றது. ” போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.