குடும்பத்திற்காக தனது ஆசையை கைவிட்ட தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் டீசர் வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதிதா, சந்தீப் கிஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இதையடுத்து D50 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பது மட்டுமின்றி இயக்கியும் வருகிறார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

நடிகர் தனுஷ் தனது தந்தையால் தான் நடிகராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போது கஸ்தூரி ராஜாவிற்கு கடன் தொல்லை இருந்ததன் காரணமாக தனுஷை வைத்து படத்தை எடுத்துள்ளார்.

தனது குடும்பத்திற்காக தன்னுடைய சமையல் கலைஞராக வேண்டும் என்ற ஆசையை கைவிட்டாராம். ஆனால், ஒரு வேலை நடிகர் தனுஷ் சமையல் கலைஞராகி இருந்தால் இந்த அளவிற்கு ரசிகர்கள் அன்பு கிடைத்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.