குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு இலவச யூரியா.

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு பெரும்பாக்கத்திற்கு 365,000 யூரியாவை  இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது.

விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான உதவிகளை வழங்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. என  விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு உறை வீதம் நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 365,000 விவசாய குடும்பங்களுக்கு இதனை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் பருவத்திற்குள் 14,000 குறைந்த வருமானம் பெறும் பெண் குடும்பங்களுக்கு தலா ரூ.18,000 வீதம் பயறு பயிர்ச்செய்கைக்கு நிதியுதவி வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஒப்புக்கொண்டுள்ளது.

உணவு நெருக்கடியை அடுத்து, நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக பயறு பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டும் என்று இவ் அமைப்பு (WFO) இலங்கை தொடர்பான தனது அறிக்கையில் கூறியுள்ளது.