குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும், 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில்.

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும், 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இன்று காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து  பாடசாலை மாணவர்கள்  மற்றும் ஆசிரியர் மீது தாக்கியுள்ளது.

இதனால் பாதிப்படைந்தவர்களில் 12 மாணவர்கள் பதவியா பிரதேச வைத்தியசாலையிலும், 8  ஆசிரியர்களும், 12  மாணவர்களும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும், 03 மாணவர்கள் மடுகந்த பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.