குழந்தைக்கு உணவில்லாததால் பால் ரின் திருடியவர் கைது.

குழந்தைக்கு உணவில்லாததால் அளுத்கம பகுதியில் உள்ள  பல்பொருள் அங்காடியில் பால் ரின் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கிறது. குறிப்பாக மண்ணெண்ணெய் விநியோகம் பல மாதங்களாக சிக்கலான நிலைமையில் உள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில், 30 வயதான மீனவர் ஒருவரே தனது பிள்ளைக்காக பால் ரின் திருடி கைதாகியுள்ளார்.

அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.  இளைய பிள்ளை ஒன்றரை வயதுடையவர்.

பல்பொருள் அங்காடியில் 3,100 ரூபா பெறுமதியான பால் ரின் ஒன்றை திருடியுள்ளார்.

நிறுவன ஊழியர் மூலம் கைதான சந்தேகநபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.