ஐரோப்பாவில், குழந்தையே பிறக்காதென எண்ணிய பெண்ணுக்கு, 11-வது மாதத்தில் 11-ந் தேதியில், 11-ஆவது குழந்தை பிறந்துள்ள சம்பவம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சது நார்ட்லிங், 21 வயதில் முதன்முறையாக கர்ப்பமானார்.
ஆனால், கருப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அவரது கரு கலைந்து போனதாக சொல்லப்படுகிறது.
அது மட்டுமன்றி, மனஅழுத்தம் காரணமாக அவரது கருமுட்டை வெளியேறுவதும் நின்று போனதாகவும் சொல்லப்படுகிறது.
குழந்தையே பெற்றுக் கொள்ள முடியாது என்று நினைத்த பெண்ணுக்கு, 2008ம் ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது.
தற்போது, அந்த தம்பதியினருக்கு 11 குழந்தைகள் உள்ளன.



