கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி.

கேகாலையில் நேற்று இரவு 10.45 அளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றும் மூன்று உந்துருளிகளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு கண்டி வீதியின் ரன்வல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனை செலுத்தி சென்றவர், நித்திரை காரணமாக மூன்று உந்துருகளையும் மோதிய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்  வேன்  சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.