கைவிடப்பட்ட சிசுவின்  தாய் கைது.

கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்தின் கழிவறையில் கைக்குழந்தையை விட்டுச் சென்றமை குறித்து கைது செய்யப்பட்ட  குழந்தையின் தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.  

குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுச் சென்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.  

நேற்று இரவு கொழும்பு கோட்டை தொடருந்து  நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்தின்  கழிவறையில் கூடை ஒன்றில் இருந்து குறித்த குழந்தை  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், குழந்தையின்  பெற்றோரான தம்பதியினர் 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகயா தொடருந்தில் இருந்து கைவிடப்பட்ட இந்த குழந்தையை பயணிகளும் தொடருந்து அதிகாரிகளும் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.