கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு –  யாழ் பல்கலை மருத்துவ மாணவர்களும் இணைவு

முல்லைத்தீவு_கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் புஷ்பரட்ணம்  தலைமையிலான   யாழ் பல்கலை மருத்துவ மாணவர்களும்  
இணைந்துள்ளனர்

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது நேற்று முன்தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பணிகள் ஆரம்பிக்க தொடங்கியதையடுத்து நேற்றையதினம் அகழ்விடத்தில் எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.