கொதிகலன் வெடித்ததால் தொழிற்சாலையில் தீ. ; மூவர் பலி.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்த நிலையில், 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசிக்கின் முண்டேகான் பகுதியில் உள்ள ஜிண்டால் தொழிற்சாலையில்,  கொதிகலன்   வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், ஆலையின் பிற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது.

கொளுந்துவிட்டு தீ எரிந்து வரும் நிலையில், ஏராளமானோர் ஆலையின் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட பெரும் தாக்கத்தை, சுமார் 20 முதல் 25 கிராமங்கள் வரை உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.