கொரியரில் வந்த மிக்சி வெடித்து உரிமையாளரின் கவலைக்கிடம்.

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள கொரியர் கடையில் கொரியரில் வந்த  மிக்ஸி வெடித்ததில் கடை உரிமையாளர் படுகாயமடைந்தார்.

கே.ஆர்.புரம் பகுதியில் சசி என்பவர் நடத்தி வரும் கொரியர் கடையில் வெடி சத்தம் கேட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது கடை முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டதோடு, சசி கை விரல்கள் சேதமடைந்து, காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சசியிடம் விசாரணை நடத்தியதில், கொரியரில் வந்த  மிக்ஸி  திடீரென வெடித்ததாக கூறியுள்ளார்.

அங்கு வெடிகுண்டு வெடித்த தடயம் எதுவும் இல்லை என்று, தடயவியல் வல்லுநர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும், சசியின் வயிற்றை துளைத்துச் சென்றது மிக்ஸியின் பாகங்கள் தான் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.