கொழும்பில் துப்பாக்கி சூடு : இளைஞன் பலி.

கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.