கோட்டையில் ஆர்ப்பாட்டம். :காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு

கொழும்பு – கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 96  ஆக அதிகரித்துள்ளது. என கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன .

நேற்றைய தினம் அரசுக்கு எதிராக கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .