கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலி.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண் பக்தர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

கத்து ஷியாம்ஜி கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாட்டிற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

அதிகாலை 5 மணியளவில் கோயில் கதவு திறக்கப்பட்டதும் பக்தர்கள் முண்டியடித்தவாறு உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது, பெண் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், பின்னே வந்த பக்தர்கள் அடுத்தடுத்து கீழே விழுந்ததால் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.