கோர விபத்தில் உயிரிழந்த இளம் பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்

நல்லதண்ணியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்த இளம் பெண்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

33 வயதான நயனாரத்ன குமாரி, 22 வயதான கசுனி 33 வயதான மிலான்கௌசல்ய ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பண்டாரவளை, மஹரகம மற்றும் ஹிக்கடுவ, களுபே ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.

உயிரிழந்த இரண்டு பெண்களும் இரத்மலானையிலுள்ள மெலிபன் நிறுவனத்தில் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 21 பேர் படுங்காயமடைந்ததோடு மேலும் ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.