மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது.
படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தன.
படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததனர். இதில் 35 பேர் உயிரிழந்தனர்.
கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 20 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர்.