சகோதரர்கள் இருவர் மின்னல் தாக்கி பலி

கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வகுருவெல பிரதேசத்தில் வயல்வெளியில் இருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மழையில் நனைவதை தவிர்ப்பதற்காக  கொட்டகைக்குள் சென்ற சகோதரர்கள் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கோனகங்கார  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிதாரா மதுவந்த (34) மற்றும் டபிள்யூ.எம். சமிந்த பண்டார (32) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த இரு இளைஞர்கள் உட்பட பலர்  வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, மழை பெய்ததும் அங்கிருந்த கொட்டகைக்குள் சென்றுள்ளனர்.  

சிறிது நேரத்தில் அவர்கள் இருந்த கொட்டகையை மின்னல் தாக்கியதுடன்,  கொட்டகையும் தீப்பற்றி எரிந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கோனகங்கார பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.