நம் உடலில் உண்டாகும் பல நோய்களுக்கு நம்மைச் சுற்றியே தீர்வுகளும் கிடைக்கின்றது.
நாம் எப்போதும் இயற்கையுடன் இணைந்து தான் வாழ்கிறோம்.
அதனால், நமக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகளுக்கு இயற்கையிலேயே மருந்துகளும் உள்ளன.
ஒரு தாவரத்தின் வேர் முதல் தண்டு, இல்லை பூ, கனி, காய் வரை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.
அந்த வகையில், சங்கு பூவில் டீ வைத்து குடிப்பதால், என்னென்ன நோய்கள் குணமாகும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
முதலில் சங்கு பூவை எடுத்து அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். நீல நிறமாக மாறிய பின்னர் அதனை வடிகட்டி அதில், சிறிது எலுமிச்சை சாறு, கருப்பட்டி சேர்த்து கலந்தால் சங்குப்பூ டீ தயார்.
மருத்துவ பயன்கள்:-
தினமும் சங்குப்பூ டீ குடிப்பதால், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட சுவாச பிரச்சனைகள் தீரும். இது காய்ச்சலைக் குறைக்க உதவும்.
சங்கு பூவில் ஆண்டிபிரைடிக் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள்,செரிமான பண்புகள் உள்ளிட்டவை உள்ளன.
அதனால், வலி மற்றும் வீக்கத்தைப் போக்கவும், அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை தீர்க்கவும் உதவுகிறது.
சங்கு பூ புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. பல தோல் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.