சமையலறையில் ஏற்பட்ட தீ. ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி.

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.

மேக்டலீனா மில்பஸ் அட்லஸில் உள்ள ஒரு வீட்டில் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை அணைக்க முற்பட்ட போதே ஒரே குடும்பத்தை சேர்ந்த  12 பேர் உயிரிழந்தனர்.

இதில், 4 மாத குழந்தை முதல் 14 வயது வரையிலான ஆறு சிறுவர், சிறுமிகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.