ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 6.1 மெக்னிடியூட்டாக இன்று அதிகாலை இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில், 51 கிலோமீற்றர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில இடங்களில் நில அதிர்வு பதிவானதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வால எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .