நீர்க்கொழும்பு பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.