சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து – 2 பேர் பலி.

பென்சில்வேனியாவின் வெஸ்ட் ரீடிங்கில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

கடந்த 1948ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான ஆர்.எம்.பால்மர் எனும் சாக்லேட் தொழிற்சாலையில் 850 பேர் பணிபுரிகின்றனர். 

இந்நிலையில் தொழிற்சாலையின் 2ம் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் அருகில் இருந்த கட்டிடம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இதில் சிக்கி 9 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கு மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது