சிட்டுக்குருவிக்கு விமானத்தில் பறக்க வாய்ப்பு.

சீனாவில், பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்துக்குள் திடீரென பறக்கத் தொடங்கிய குருவியை பணிப்பெண்கள் பிடித்துள்ளனர்.

அன்ஹுய் மாகாணத்தின் மீது ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்த போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

விமானம் பறக்கும் போது அந்த குருவி உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என அந்த விமானத்தின் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகள் அமரும் இடத்தில் அந்த குருவி பறந்ததாகவும்,  விமானத்தை இயக்கும் அறைக்குள் நுழையாததால், பயணிகளின் உயிருக்கு பறவையால் எந்த விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.