சிரியாவில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி.

சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

ஃபர்டஸ் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஐந்து மாடிக் கட்டிடம் நேற்று இடிந்து விழுந்துள்ளது.

இதில், மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் வரை உயிரிழந்த நிலையில், இடிபாடுகளுக்குள்  சிக்கி மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.