சிரியாவில் பயங்கரவாத தாக்குதல். ; 10 பேர் பலி.

சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில், எண்ணெய் வயல் ஊழியர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் அரச செய்தி முகவராகமான சனா இன்று தெரிவித்துள்ளது.

தேய்ர் மாகாணத்திலுள்ள எண்ணெய் வயலிலிருந்து ஊழியர்களை ஏற்றிச்சென்ற 3 பஸ்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக சனா தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து மேற்படி செய்தி முகவரகம் எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும்,  ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் எனும் யுத்த கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.