சிறுவர் தின சிறப்பு கவிதைகள்  – 2022

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களே
இன்றைய நாள் உங்கள் நாளாகவே
சிறுவர் தினமாக கொண்டாடவே
சின்னஞ் சிறு கருவாய் உருவெடுத்தாயோ
உன் தாயின் வயிற்றில்!!!

 உலகம் போற்ற வாழ்ந்து
நன்மைகள் பல செய்யவே
நாமக்காக இந்த தினத்தை கடவுள் கொடுத்தாரோ!!!
விளையாட்டுடன் பல கலைகளையும் கற்று
வித்துவான் ஆக தலை நிமிர அருள் புரிவாரோ!!!

 சுகாதாரமாக வாழ தாயின் சொல் கேட்க வேண்டும்
சுட்டுப் பயல்களாக பெயர் எடுக்க விளையாட்டாக இருக்க வேண்டும்!!!
திரையில் நடிகர்களை பார்கவோ அரங்கிற்கு போகிறோம் எட்டுத்திக்கிலும் சிறுவர்கள் அவர்களுக்கான இந்த நாளை
கொண்டாடுவதை பார்க்க மாட்டிர்களோ!!!

 குயில் கூவும் பாடலுக்கு பொருள் கூற முடியுமா?
ஆனால்
சிறுவர்கள் எனும் சொல்லின் பொருள் கூறமுடியும் ஏனெனின்
நீயும் சிறுவனின் வயதை தாண்டியே
வந்தாய் என்பதை புரிந்துகொள்
புனிதனே!

எழுத்து – கிண்ணையூர் சதுர்சியா
தரம் – 11
விவேகானந்தா மகளீர் இல்லம்,
வாழைச்சேனை