சிறை மீது தாக்குதல். : 855 கைதிகள் தப்பியோட்டம் – 11 பேர் பலி.

நைஜீரியா தலைநகர் அபுஜாவில் சிறை மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 850-க்கும் மேற்பட்ட கைதிகளை தப்பியோடச் செய்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜிகாதிகளை விடுவிக்க, போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் காவல் அதிகாரி உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 855 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 300 பேரை மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை தேடி வருவதாகவும் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.