சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜபக்சபுர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் என்பதுடன் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.