சீனாவில் ஓமிக்ரோன் உருமாற்றமே கொரோனாவுக்கு 95 சதவீதம் காரணம் .

சீனாவில் தற்போது கோவிட் பேரலையாகப் பரவி வருவதற்கு கொரோனாவின் மரபணு உருமாற்றமான ஒமிக்ரான் B.A.5 புள்ளி 2 மற்றும் B.F.7 ஆகியவையே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருவதாகவும் இந்த நோய்த் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனாவில் புதிய வகை உரு மாற்றங்களையும் கண்டறிந்து உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.